பிராய்லர் கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை

பிராய்லர் கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை

by Staff Writer 11-03-2020 | 7:13 PM
Colombo (News 1st) பிராய்லர் (Broiler) கோழி இறைச்சிக்கான நிர்ணய விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தோலுடன் கூடிய ​கோழி இறைச்சி ஒரு கிலோகிராமிற்கு அதிகபட்ச சில்லறை விலையாக 450 ரூபாவும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சிக்கு 530 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கோழி இறைச்சிக்கு வர்த்தகர்களினால் அதிக விலை அறவிடப்படுகின்றமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.