தலிபான் போராளிகளை விடுவிக்க ஆப்கன் ஜனாதிபதி அனுமதி

தலிபான் போராளிகளை விடுவிக்க ஆப்கன் ஜனாதிபதி இணக்கம்

by Chandrasekaram Chandravadani 11-03-2020 | 8:30 AM
Colombo (News 1st) தலிபான் போராளிகள் 1,500 பேரை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி (Ashraf Ghani) அனுமதியளித்துள்ளார். தலிபான் அமைப்பினருடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் தாம் மீண்டும் மோதல்களில் ஈடுபடப்போவதில்லை என்ற எழுத்துமூல உத்தரவாதத்தினை வழங்கவேண்டும் என, விடுவிக்கப்படும் அனைத்துப் போராளிகளிடமும் ஐனாதிபதி கோரியுள்ளார். இந்தப் பரிமாற்றத்தின் கீழ் 1,000 அரச படையினரை விடுவிப்பதற்கு தலிபான் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. தலிபான் அமைப்புடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் ஒருபகுதியாக அமெரிக்கா தமது படைகளை மீளப்பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையிலேயே, ஆப்கன் அரசின் இந்த நடவடிக்கையும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.