சிவனொளிபாத மலை வீதியை துப்புரவு செய்யும் V-Force

சிவனொளிபாத மலை வீதியை துப்புரவு செய்யும் V-Force செயற்றிட்டம்

by Staff Writer 11-03-2020 | 7:47 AM
Colombo (News 1st) V-Force மற்றும் இலங்கை விமானப் படை இணைந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியை துப்புரவு செய்யும் பணிகளை முன்னெடுக்கவுள்ளன. இந்த செயற்றிட்டம் இன்று (11) மற்றும் நாளைய (12) தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன. சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியை துப்புரவு செய்யும் பணிகள் மூன்றாவது தடவையாகவும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தத் துப்பரவுப் பணிகளில் இலங்கை விமானப் படையினர் மற்றும் V-Force தன்னார்வத் தொண்டர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.