கண்காணிப்பிற்கு ஒத்துழைக்குமாறு இராணுவம் கோரிக்கை

கொரோனா கண்காணிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவம் வேண்டுகோள்

by Staff Writer 11-03-2020 | 2:17 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவிவரும் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகைதரும் நபர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு சிலரினால் எதிர்ப்பு வௌியிடப்படுவதுடன் அச்சத்தினால் தடைகளும் ஏற்படுத்துவதாக இலங்கை இராணுவம் அறிக்கையூடாக சுட்டிக்காட்டியுள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக Batticaloa Campus மற்றும் கந்தக்காடு கண்காணிப்பு நிலையங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் பஸ்களை இடையில் நிறுத்துவதற்கும் தடை ஏற்படுத்துவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து 449 பேர் குறித்த மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்