ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2020 | 7:01 am

Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (11) மாலை நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் செயற்குழு கூடவுள்ளது.

தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இங்கு கலந்தாலோசிக்கபடவுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவில் உள்ளடங்கும் கட்சித் தலைவர்கள் நேற்று மாலை அலரிமாளிகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்