தேங்காய்களை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை

தேங்காய்களை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை

தேங்காய்களை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2020 | 6:52 am

Colombo (News 1st) தேங்காய்களை சலுகை விலையில் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை தெங்கு அபிவிருத்தி சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய முதல் கட்டத்தின் கீழ் 3 இடங்களில் குறைந்த விலையில் தேங்காய்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை தெங்கு அபிவிருத்தி சபை, நுகேகொடை சந்தை மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பஸ்நிலையச் சந்தை ஆகிய இடங்களில் சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்ய தெங்கு அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்