ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2020 | 2:01 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு குறித்த ஆணைக்குழு, ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் நிறைவடையுவுள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான ஜனாதிபதியின் பதில் விரைவில் கிடைக்கும் என ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று மேலும் இரண்டு அரச அதிகாரிகள் சாட்சியமளித்துள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் மற்றும் நிறுவனங்களின் பதிவாளர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரும் நேற்று சாட்சியமளித்துள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை அரச அதிகாரிகள் உள்ளிட்ட 85 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்