கொரோனா சிகிச்சை பிரிவிற்கு மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு

கொரோனா சிகிச்சை பிரிவிற்கு மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு

கொரோனா சிகிச்சை பிரிவிற்கு மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2020 | 7:18 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இன்று காலை முதல் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்த சட்டத்தரணிகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டம் பின்னர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.

இதேவேளை, Batticaloa Campus-இற்கு சுமார் 250 மீட்டர் தொலைவிலுள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்திற்கு இன்று மாணவர்கள் வருகை தரவில்லை என்பதுடன், ஆசிரியர்களின் வருகையும் மிக குறைவாக பதிவாகியுள்ளது.

இந்த பாடசாலைக்கு நேற்றும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே வருகை தந்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளரிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக பிள்ளைகளை பெற்றோர் பாடசாலைக்கு அனுப்ப விரும்பவில்லை என வலயக் கல்விப் பணிப்பாளர் S.M.M.S. உமர் மௌலானா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்