உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2020 | 6:05 pm

Colombo (News 1st) ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படைக்கு உக்ரைனில் இருந்து மிக் விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல்களில் முறையற்ற விதத்தில் தலையிட்டு நிதி பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்