ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2020 | 4:06 pm

Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜ குகனேஸ்வரன், ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும், வன்னி மாவட்ட அமைப்பாளர் திலீபன் மற்றும் கிரிதரன் ஆகியோரை இம்முறை வேட்பாளராகக் களமிறக்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடாக 1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் ராஜ குகனேஸ்வரன் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்