வௌிநாடுகளிலிருந்து வந்த 181 பேர் Batticaloa Campus இற்கு அழைத்து செல்லப்பட்டனர்

வௌிநாடுகளிலிருந்து வந்த 181 பேர் Batticaloa Campus இற்கு அழைத்து செல்லப்பட்டனர்

வௌிநாடுகளிலிருந்து வந்த 181 பேர் Batticaloa Campus இற்கு அழைத்து செல்லப்பட்டனர்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2020 | 1:45 pm

Colombo (News 1st) தென் கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து பயணிகளை ஏற்றிய இரண்டு விமானங்கள் இன்று (10) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.

இரண்டு விமானங்களிலும் நாட்டை வந்தடைந்த 181 பேரை மட்டக்களப்பு Batticaloa Campus இல் கண்காணிப்பிற்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டை வந்தடைந்தவர்களில் இலங்கை பிரஜைகள் 179 பேரும் தென் கொரிய பிரஜைகள் இருவரும் அடங்குவதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாலியிலிருந்து 15 பயணிகளை ஏற்றிய விமானமொன்று இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

அத்துடன், 166 பயணிகளை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை தென் கொரியாவிலிருந்து நாட்டை வந்தடைந்திருந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியானதொரு பகுதியில் இருந்து பஸ்ஸினூடாக இவர்கள் மட்டக்களப்பு மற்றும் கண்டகாட்டில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எனினும், கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தி பராமரிப்பதற்கு பணம் அறவிடப்படுவதாகக் கூறி சிலர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

எந்தவொரு இலங்கையரிடமும் இதற்காக பணம் அறவிடப்படுவதில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்