by Bella Dalima 10-03-2020 | 5:04 PM
Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிருக்கான இருபதுக்கு 20 நிரல்படுத்தலில் அவுஸ்திரேலியாவின் பெத் மூனி (Beth Mooney) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அணிகளுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடத்தைப் பெற்றுள்ளது.
மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடர் முடிவுற்றதை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிய தரவரிசை மற்றும் நிரல்படுத்தலை வெளியிட்டுள்ளது.
வீராங்கனைகளுக்கான பட்டியலில் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ள பெத் மூனி 782 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
நியூஸிலாந்தின் சுஸி பேட்ஸ் (Suzie Bates) இரண்டாமிடத்திலும், இந்தியாவின் ஷஃபாலி வர்மா (Shafali Verma) மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
இலங்கை அணித்தலைவி சமரி அத்தபத்து 14 ஆம் இடத்தில் உள்ளார்.
அணிகளுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடத்தை வகிக்கிறது.
இங்கிலாந்து இரண்டாமிடத்திலும், நியூஸிலாந்து மூன்றாமிடத்திலும் உள்ளன.
இலங்கை மகளிர் அணி எட்டாமிடத்தைப் பெற்றுள்ளது.