நீர்கொழும்பில் இருதரப்பினருக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி

நீர்கொழும்பில் இருதரப்பினருக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி

நீர்கொழும்பில் இருதரப்பினருக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2020 | 10:13 am

Colombo (News 1st) நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள ஹோட்டலுக்கு வந்த 6 பேர், மதுபானம் அருந்துவதற்கு முற்பட்டுள்ளனர்.

இதன்போது ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அதனைத் தடுப்பதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய குறித்து நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நால்வர், சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் தாக்குதலுக்கு இலக்கான 36 வயதான ஹோட்டல் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்