தென் கொரியாவிலிருந்து 166 பேர் நாட்டுக்கு வருகை

தென் கொரியாவிலிருந்து 166 பேர் நாட்டுக்கு வருகை

தென் கொரியாவிலிருந்து 166 பேர் நாட்டுக்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2020 | 8:35 am

Colombo (News 1st) தென் கொரியாவிலிருந்து 166 பயணிகளை ஏற்றிய விமானம் இன்று (10) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

இலங்கை பிரஜைகள் 164 பேரும் தென் கொரியாவை சேர்ந்த இருவரும் இன்று அதிகாலை 3.33 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த 166 பேரும் Batticaloa Campus இல் தங்கவைக்கப்பட்டு 14 நாட்களுக்கு கண்காணிக்கப்படவுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையங்கள் தற்போது தயார்செய்யப்பட்டுள்ளன.

இதன்படி ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வருகைதரும் பயணிகள் Batticaloa Campus மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் இன்று (10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அத்தியவசிய தேவைகளை தவிர வௌிநாட்டுப் பயணங்களை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டில் கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்