ஜயவர்தனபுர பல்கலை மாணவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

by Staff Writer 10-03-2020 | 1:07 PM
Colombo (News 1st) தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவரின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாகவுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த மாணவர், அவசர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழக மாணவர் தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறி, தலையில் அதிக இரத்தப் போக்குடன் நேற்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் பக்கசார்பின்றி விசாரணைகளை முன்னெடுத்து, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.