by Staff Writer 10-03-2020 | 6:54 AM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (10) காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையின் சப்புகஸ்கந்த உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் நாளை (11) காலை 8 மணி வரையான 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நிலவும் வறட்சியுடன் கூடிய வானிலையால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர் விரயம் மற்றும் மழை பெய்யாமை உள்ளிட்ட காரணிகளால் நாளந்தம் நீர்வெட்டை அமுல்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தலைவர் நிஷாந்த ரணதுங்க கூறியுள்ளார்.