ஆப்கனில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினரின் எண்ணிக்கை குறைப்பு

ஆப்கனில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினரின் எண்ணிக்கை குறைப்பு

ஆப்கனில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினரின் எண்ணிக்கை குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2020 | 11:58 am

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானிலிருந்து தமது படையினரை அமெரிக்கா மீள அழைக்க ஆரம்பித்துள்ளது.

தலிபான்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது ஆப்கானில் நிலைகொண்டுள்ள சுமார் 12,000 படையினரை 135 நாட்களுக்குள் 8,600 ஆகக் குறைப்பதாக குறித்த உடன்படிக்கையில் அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாகத் தொடர்ந்துவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்குடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை கடந்த 29ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த உடன்படிக்கையில் ஆப்கன் அரசாங்கம் அங்கம் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்