மரக்கறி விலையை பேணுவதற்கான வேலைத்திட்டம்

மரக்கறி விலையை பேணுவதற்கான வேலைத்திட்டம்

by Staff Writer 09-03-2020 | 6:58 PM
Colombo (News 1st) மரக்கறிகளின் விலையைப் பேணுவதற்கு புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மரக்கறிகளின் விலை தற்போது பொருளாதார மத்திய நிலையத்தினால் பேணப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த நிலையை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தினால் அனாவசியமாக மரக்கறிகளின் விலை அதிகரிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.