மசகு எண்ணெயின் விலையில் பாரிய மாற்றம்

by Staff Writer 09-03-2020 | 3:26 PM
Colombo (News 1st) உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 30 வீதத்தால் குறைவடைந்துள்ளது. 1991ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதிக்கு பின்னர் அதிகூடிய விலை வீழ்ச்சியாக இது பதிவாகியுள்ளது. ரஷ்யா, உலக சந்தைக்கு விநியோகிக்கும் எண்ணெயின் அளவைக் குறைப்பதற்கு இணங்காதமையால் அதற்கு பதிலளிக்கும் வகையில் சவூதி அரேபியா மசகு எண்ணெயின் விலையை குறைத்துள்ளது. இதன்காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. பிரித்தானியாவின் ப்ரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 31.2 டொலராகவும் அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 30 அமெரிக்க டொலராகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது. 7 வருடங்களின் பின்னர் இவ்வாறு தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்சின் விலை ,1702.45 டொலராக காணப்படுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகளவில் கொள்வனவு செய்கின்றமையினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.