ஆஸ்திரிய பனிச்சறுக்கலில் சிக்கி அறுவர் உயிரிழப்பு

பனிச்சறுக்கலில் சிக்கி அறுவர் உயிரிழப்பு: ஆஸ்திரியாவில் சம்பவம்

by Staff Writer 09-03-2020 | 3:34 PM
Colombo (News 1st) ஆஸ்திரியாவின் அல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட இருவேறு பனிச்சரிவுகளில் சிக்கி குறைந்தது அறுவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டச்ஸ்டெய்ன் மலைப் பிராந்தியத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த ஐந்து பேர், செக் குடியரசின் பிரஜைகள் என நம்பப்படுகின்றது. பனிச்சறுக்குப் பயணமாகச் சென்ற அவர்களை சுமார் 2,800 மீற்றர் உயரத்திலிருந்து சரிந்துவீழ்ந்த பனி தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரியாவின் தென் பிராந்தியத்திலுள்ள கரிந்தியாவில் இடம்பெற்ற மற்றைய பனிச்சரிவில் சிக்கி 33 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பனிச்சரிவுகளைத் தொடர்ந்து அங்கிருந்து மீட்கப்பட்ட 100 பேரை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுசெல்வதற்காக 7 ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.