by Staff Writer 09-03-2020 | 4:18 PM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த வௌ்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுகின்றன.
இதனால் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர், அரச ஊழியர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், பொதுத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களின் கட்டுப்பணம் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.