இலங்கையர்களுக்கு கத்தார் செல்ல தற்காலிக தடை

by Fazlullah Mubarak 09-03-2020 | 2:44 PM

Colombo (News 1st) இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து வருகை தருவோருக்கு இன்று (09) முதல் அமுலாகும் வகையில் கத்தார் தற்காலிக தடை விதித்துள்ளது.

பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், இத்தாலி, ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் தற்காலிக தடை விதிக்கப்பட்ட நாடுகளில் அடங்குகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால் கத்தார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், பஹ்ரைன், லெபனான், சிரியா, தென் கொரியா, எகிப்து, இத்தாலி, ஈராக் ஆகிய நாடுகளுக்கு செல்வதற்கும் அங்கிருந்து நாட்டுக்கு வருவதற்கும் சவூதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளது. இதேவேளை, இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு நிறுவகம் தெரிவித்துள்ளது.