புதிய கட்சியின் தலைமையகத்தை திறந்துவைத்தார் சஜித்

புதிய கட்சியின் தலைமையகத்தை திறந்துவைத்தார் சஜித்

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 Mar, 2020 | 2:36 pm

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் இன்று (09) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, இன்றைய தலைமையக திறப்புவிழா நிகழ்வில் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரதான இடமாக ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் திகழும் என அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்துள்ளார்.

கட்சி மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த அலுவலகத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்