by Staff Writer 08-03-2020 | 12:34 PM
Colombo (News 1st) ஆயிரம் தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் ஆவணங்கள் குறித்து மாகாண ரீதியில் மீளாய்வு செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய பாடசாலைகளாக பெயரிடுவதற்கு தகுதிவாய்ந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இங்கு ஆராயப்படவுள்ளது.
மாகாண ரீதியில் இந்த மீளாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக தேசிய பாடசாலைகள் அற்ற 125 பிரதேச செயலகப் பிரிவுகளில்,125 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மேம்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான யோசனைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த 125 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக பெயரிடப்படுமாயின் நாட்டிலுள்ள மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.