Colombo (News 1st) சீனாவின் குவான்ஸியூ நகரிலுள்ள ஹோட்டல் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கி மேலும் 29 பேர் காணாமல் போயுள்ளனர்.
குறித்த ஐந்து மாடி ஹோட்டலானது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வசதிகளை எற்படுத்தி கண்காணிப்பு நிலையமாகப் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 38 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அவசரநிலை மேலாண்மை முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆனால், குறித்த சம்பவத்திற்கான காரணம் தௌிவாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகின்றது.