கொரோனா வைரஸ்: இத்தாலிய மாகாணங்கள் மூடப்பட்டன

கொரோனா வைரஸ்: இத்தாலிய மாகாணங்கள் மூடப்பட்டன

by Staff Writer 08-03-2020 | 12:51 PM
Colombo (News 1st) இத்தாலியின் மிகவும் செல்வந்த மற்றும் அதிக சனத்தொகை கொண்ட லொம்பர்டி (Lombardy பிராந்தியம் உட்பட 14 மாகாணங்கள் எதிர்வரும் ஏப்ரல் வரை மூடப்பட்டுள்ளதாக அந்நாடு பிரதமர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 16 மில்லியன் மக்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, திருமணம் மற்றும் மரணச் சடங்கு போன்றனவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் அதிகளவாக கொரோனா தாக்கியுள்ள நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. அந்தவகையில், இத்தாலியில் கொரோனா தாக்கத்தல் சிக்கி 230 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5,883 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் முன்னுரிமை வழங்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.