வௌிநாட்டுப் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது

வௌிநாட்டுப் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது

வௌிநாட்டுப் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2020 | 11:30 am

Colombo (News 1st) பொத்துவில் பகுதியில் ஹோட்டலொன்றில் வைத்து வௌிநாட்டு பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் மற்றுமொரு பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 18 வயதான பிரித்தானிய யுவதி, பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த யுவதியின் 19 வயது நண்பியையே, சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முற்பட்டுள்ளார்.

அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலுள்ள மற்றுமொரு ஹோட்டலுக்கு சென்று வந்த சந்தர்ப்பத்திலேயே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட 28 வயதான சந்தேகநபர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்