மூன்று மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் துண்டிப்பு

மூன்று மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் துண்டிப்பு

மூன்று மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் துண்டிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2020 | 2:04 pm

Colombo (News 1st) நிலவும் வறட்சியான வானிலையால், கம்பஹா, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதி மக்களுக்கு பவுசர் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் R.H. ருவினஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக, நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வறட்சியுடன் கூடிய வானிலை நீடிக்குமானால், பதுளை, மஹியங்கனை, குருநாகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறட்சியுடனான வானிலையால், குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் பகுதிகள் காணப்படுமாயின், அது குறித்து 1939 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்