மாத்தளை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று

மாத்தளை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று

மாத்தளை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2020 | 1:12 pm

Colombo (News 1st) இந்துக்களால் கொண்டாடப்படும் கடலாடும் விழாவான மாசி மகம் இன்றாகும்

மாசி மாதத்து பௌர்ணமியுடன் கூடிவரும் மகம் நட்சத்திர நன்நாளையே மாசிமகம் என புராணங்கள் கூறுகின்றன.

இயற்கை எழில் கொஞ்சும் மாத்தளை நகரில் எழுந்தருளி அருள்பாளிக்கும் ஶ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக இரதோற்சவ பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது.

விநாயகர், முருகப்பெருமான், சிவன் – பார்வதி, முத்துமாரியம்மாள், சண்டேஸ்வரி ஆகிய உற்சவ மூர்த்திகள் சித்திரத் தேர்களில் எழுந்தருளியுள்ளனர்.

பால்காவடி, பறவைக்காவடி, ஏந்தியும் கற்பூரச் சட்டி, கரகங்களை சுமந்தும் பக்தர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு சக்தி FM இன் சிறப்பு கலையகமும் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான முன்னேஸ்வர தேவஸ்தானத்தின் மாசி மாத வருடாந்த மகோற்சவத்தில் இன்று தேர்த் திருவிழா நடைபெறுகின்றது.

வட மேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரம் ஆலயம் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

கடந்த 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த மகோற்சவத்தில் இன்று இரதோற்சவம் நடைபெறுகின்றது.

இன மத பேதமின்றி பக்தர்கள் தமது நேற்றிக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்