8 மாவட்டங்களில் கடும் வறட்சி: 2,98,132 பேர் பாதிப்பு

8 மாவட்டங்களில் கடும் வறட்சி: 2,98,132 பேர் பாதிப்பு

8 மாவட்டங்களில் கடும் வறட்சி: 2,98,132 பேர் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Mar, 2020 | 3:54 pm

Colombo (News 1st) 8 மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 2,98,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

74,796 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

51,175 குடும்பங்களைச் சேர்ந்த 2,15,525 பேர் களுத்துறை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்