பொதுத்தேர்தல்: 6000 பேர் கண்காணிக்கவுள்ளனர் 

பொதுத்தேர்தலில் 6000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக PAFFREL தெரிவிப்பு

by Staff Writer 07-03-2020 | 4:32 PM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளை சேர்ந்த 6000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது சர்வதேச நாடுகளை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் 40 பேர் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். வேட்பு மனு கையளிக்கும் நாள் தொடக்கம் கண்காணிப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தை சேர்ந்தவர்களும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். இதேவேளை, 9 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. எதிர்வரும் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்துவதற்கான அவகாசம் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் 2000 ரூபாவாகும்.