பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டி: ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு

by Staff Writer 07-03-2020 | 6:02 PM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. சட்டத்தரணியின் ஊடாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு எதிரான ஒன்றென செயற்குழுவின் முன்னாள் உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மாக்கார் தெரிவித்தார். இது ஒரு துரதிர்ஷ்டவசமான தீர்மானம் எனவும் இந்த தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒரு சிலருடையது எனவும் அவர் குறிப்பிட்டார்.