ரவூப் ஹக்கீம், ஹசன் அலி சந்திப்பு

ரவூப் ஹக்கீம், ஹசன் அலி சந்திப்பு

ரவூப் ஹக்கீம், ஹசன் அலி சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Mar, 2020 | 8:23 pm

Colombo (News 1st) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பின் பெயரில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவில் அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொதுத்தேர்தலின் போது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக ஹசன் அலி தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பிலும் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அதிகக் கவனம் செலுத்தப்பட்டதாக சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த மாதம் கண்டியில் இடம்பெற்ற பேராளர் மாநாட்டின் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீண்டும் கட்சியில் வந்து சேருமாறு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்