நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் ஜான்வி கபூர்

நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் ஜான்வி கபூர்

நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் ஜான்வி கபூர்

எழுத்தாளர் Bella Dalima

07 Mar, 2020 | 5:46 pm

நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிப்பதாக ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் கூறியிருக்கிறார்.

ஸ்ரீதேவி மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார் ஜான்வி கபூர்.

சமீபத்தில், தன் தாயின் இரண்டாவது நினைவு நாள் அன்று, தன் குழந்தை பருவத்தில் எடுத்த, கறுப்பு – வெள்ளை புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ‘ஒவ்வொரு நாளும் உங்கள் இழப்பை உணர்கிறேன்’ என, பதிவிட்டிருந்தார் ஜான்வி.

”படப்பிடிப்பு, சுற்றுலா, தோழியருடன் ஊர் சுற்றுதல் என நாட்கள் பரபரப்பாக நகர்ந்தாலும், என்னுடன் இப்போது அம்மா இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன். அவரது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன்,”

என்று கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்