தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

07 Mar, 2020 | 4:01 pm

Colombo (News 1st) திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தனது 98 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவுடன் இருந்த அவர், சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் காலமானார்.

1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி திருவாரூர் மாவட்டத்தின், காட்டூர் கிராமத்தில் பிறந்த அன்பழகன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்தார்.

பேராசிரியர் க.அன்பழகனின் பூதவுடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளரின் மறைவினையடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிகழ்வுகள் அனைத்தும் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்