அம்பாறையில் இளநீர், வெள்ளரி விற்பனை அதிகரிப்பு

அம்பாறையில் இளநீர், தோடை, வெள்ளரி விற்பனை அதிகரிப்பு

by Staff Writer 07-03-2020 | 4:42 PM
Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தில் இளநீர், தோடை, வெள்ளரிப்பழம் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. இவற்றுக்கான கேள்வி அதிகரித்துள்ளதனால் விலையும் அதிகரித்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். வெள்ளரிப்பழம் 150 ரூபா முதல் 250 ரூபா வரையும், இளநீர் 80 ரூபா முதல் 130 ரூபா வரையும் தோடம்பழம் 50 முதல் 70 ரூபா வரை விற்பனையாகிறது. இளநீர் யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம் மாவட்டங்களிலிருந்து தருவிக்கப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.