முன்னேஸ்வரத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

முன்னேஸ்வரம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

by Staff Writer 06-03-2020 | 3:50 PM
Colombo (News 1st) சிலாபம் - குருணாகல் பிரதான வீதியில் முன்னேஸ்வரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முன்னேஸ்வரம் நீர்வழங்கல் நிலையத்திற்கு அருகில் இருந்து வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சிலாபம் - முஹுனுவட்டவல பகுதியை சேர்ந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். இவரின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்