ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு பிடியாணை

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு பிடியாணை

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2020 | 6:13 pm

Colombo (News 1st) 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவானால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் முதலாவது சந்தேகநபராக பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான புத்திக சரத்சந்திரவிற்கு எதிராக வழக்கை முன்னெடுத்து செல்வதற்கு போதிய சாட்சிகள் இன்மையால், அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கின் ஏனைய சந்தேகநபர்களாக அர்ஜூன மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேன, ஜெஃப்ரி அலோசியஸ், ரஞ்சன் ஹூலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜான் புஞ்சிஹேவா, சங்கரப்பிள்ளை பதுமநாபன், இந்திக சமன் குமார ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]wsfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்