முன்னேஸ்வரம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

முன்னேஸ்வரம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

முன்னேஸ்வரம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2020 | 3:50 pm

Colombo (News 1st) சிலாபம் – குருணாகல் பிரதான வீதியில் முன்னேஸ்வரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முன்னேஸ்வரம் நீர்வழங்கல் நிலையத்திற்கு அருகில் இருந்து வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிலாபம் – முஹுனுவட்டவல பகுதியை சேர்ந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவரின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்