பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ​22 பேருக்கு பிணை நிராகரிப்பு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ​22 பேருக்கு பிணை நிராகரிப்பு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ​22 பேருக்கு பிணை நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2020 | 4:03 pm

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரத்கருவே ஜினரத்ன தேரர் உள்ளிட்ட 22 பேருக்கும் பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இந்த நகர்த்தல் பத்திரத்தை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற கட்டளையை மீறி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சுக்கு முன்பாக கூடாரம் அமைத்து எதிர்ப்பில் ஈடுபட்டமை தொடர்பில் இவர்கள் 22 பேரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 16 ஆம் திகதி வரை பல்கலைக்கழக மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்