பயணியுடன் ஒருவர் மாத்திரம் செல்ல அனுமதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் முனையங்களுக்கு பயணியுடன் ஒருவர் மாத்திரம் செல்ல அனுமதி

by Staff Writer 06-03-2020 | 3:44 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனையங்களுக்கு பயணியுடன் ஒருவர் மாத்திரம் செல்லும் முறைமை இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, விமான நிலையத்தின் உட்பிரவேசிக்கும் மற்றும் வௌியேறும் பகுதிகளில் பயணியுடன் ஒருவர் மாத்திரமே செல்ல முடியும். இதற்காக 300 ரூபா பெறுமதியான அனுமதிச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். அனுமதிச்சீட்டுக்களை விநியோகிக்கும் நிலையம் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு நடைமுறையாக விமான நிலையத்தில் பயணிகளுடன் உறவினர்கள் அல்லது நண்பர்கள் உட்பிரவேசிக்க சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.