அதிக வெப்பம் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை

அதிக வெப்பம் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

by Staff Writer 05-03-2020 | 10:15 AM
Colombo (News 1st) நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை தொடர்பில் மக்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. அதிக வெப்பத்துடனான வானிலையால், குழந்தைகளும் கர்ப்பிணி தாய்மார்களும் அவதானத்துடன் இருத்தல் அவசியம் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அதிக வெப்பம் நிலவுவதால், பல்வேறு நோய்களும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடும் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த அதிகமாக நீர் அருந்துமாறும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். சில பாடசாலைகளில் இல்ல விளையாட்டு போட்டிகளும் கிரிக்கெட் போட்டிகளும் இந்தக் காலப்பகுதியில் நடத்தப்படுவதால், மாணவர்களும் அவதானத்துடன் இருத்தல் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.