புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணம் 2500 ஆக குறைப்பு

புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணம் 2500 ஆக குறைப்பு

புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணம் 2500 ஆக குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2020 | 11:50 am

Colombo (News 1st) புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணத்தை 2,500 ரூபா வரை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் நீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான கட்டணமாக 8,000 ரூபா அறவிடப்பட்டது.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் குடிநீர் தேவையின் 41 வீதம் குழாய் மூலமாக கிடைக்கும் நீரினால் நிறைவேற்றப்படுகின்றதாகவும் 2.4 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படுகின்றதாகவும் ஒரு வருடத்திற்கு சுமார், 110,000 வீடுகளுக்கு புதிய நீர் இணைப்புக்கள் வழங்கப்படுகின்றதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

நீர் வழங்கள் மற்றும் நீர் விநியோக அமைச்சினால் அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறிய அவர், பிரதமர் மற்றும் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவின் ஆலோசணையின் படி, ஒரு வருடத்தினுள் வழங்கப்படும் புதிய நீர் விநியோக இணைப்புக்களை ஒன்றரை இலட்சம் இணைப்புக்கள் வரை உயர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.

நீர் விநியோக இணைப்பை பெற்றுக்கொள்வதற்கு ஒரு குடும்பத்திற்கு அடிப்படை கட்டணமாக இதுவரையில் அறவிடப்பட்ட 8,000 ரூபாவை சில குடும்பங்களால் ஒரே தடவையில் செலுத்துவதில் சிரமம் காணப்படுகின்றமையால் ஆரம்ப கட்டணத்தை 2,500 ஆக குறைப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பந்துல குணவர்தன இதன்போது கூறினார்.

எனவே, யாரேனும் புதிய குடிநீர் இணைப்பை பெற விரும்பினால் 2,500 ரூபாவை மாத்திரம் செலுத்தி இணைப்பை பெற்றுக்கொள்ள முடிவதுடன், இணைப்புக்கான முழுத் தொகையை 12 தவணைகளில் செலுத்துவதற்கான வசதிகள் இந்த அமைச்சரவை பத்திரத்தினூடாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதன்போது விளக்கமளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்