கொரோனா தொற்று; கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம்

கொரோனா தொற்று; கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம்

கொரோனா தொற்று; கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2020 | 10:59 am

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் முதலாவது மரணம் பதிவாகியுள்ள நிலையில், Covid-19 தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நாடளாவிய ரீதியில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு வௌ்ளை மாளிகை நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்காவின் 16 மாநிலங்களில் இதுவரை 150 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் 92,000 இற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
contac[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்