இலங்கையில் இடம்பெறவுள்ள BIMSTEC மாநாடு

இலங்கையில் இடம்பெறவுள்ள BIMSTEC மாநாடு

இலங்கையில் இடம்பெறவுள்ள BIMSTEC மாநாடு

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2020 | 10:40 am

Colombo (News 1st) வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான BIMSTEC மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ளது.

BIMSTEC பொதுச் செயலாளர் எம். சஹிதுல் இஸ்லாமுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக இதனை நேற்று அறிவித்துள்ளார்.

இதன்படி BIMSTEC மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி வரை இலங்கையில் நடைபெற்ற BIMSTEC அதிகாரிகளின் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

BIMSTEC உச்சி மாநாடு பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 7 தென் கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளைக் கொண்ட பிராந்திய கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்