இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியை வென்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியை வென்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியை வென்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2020 | 7:25 am

Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

கண்டி – பல்லேகலையில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களைக் குவித்தது.

பிரென்டன் கிங் 33 ஓட்டங்களையும் லென்டல் சிம்மன்ஸ் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும் ஒன்ரே ரஸல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

தனது 500 ஆவது இருபதுக்கு 20 போட்டியில் விளையாடிய அணித்தலைவர் கிரான் பொலார்ட் 34 ஓட்டங்களை பெற்றார்.

வெற்றி இலக்கான 197 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து சிரமத்தை எதிர்நோக்கியது.

56 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன.

ஷெஹான் ஜயசூரிய, குசல் மென்டிஸ் ஆகியோர் ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர்.

ஏஞ்சலோ மெத்யூஸ் 10 ஓட்டங்களுடன் வெளியேற, தசுன் ஷானக்கவினால் 2 ஓட்டங்களையே பெற முடிந்தது.

குசல் ஜனித் பெரேரா மற்றும் வனிந்து அசரங்க ஜோடி 87 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கியது.

வனிந்து அசரங்க 44 ஓட்டங்களையும் குசல் ஜனித் பெரேரா 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 66 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி 19. 1 ஓவரில் 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

ஒஷேன் ​தோமஸ் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்