V-Force: இரண்டாவது நாளாக முன்பள்ளிக் கட்டடங்களுக்கு வர்ணப்பூச்சு 

 V-Force: இரண்டாவது நாளாக முன்பள்ளிக் கட்டடங்களுக்கு வர்ணப்பூச்சு 

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2020 | 9:18 pm

Colombo (News 1st) கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட முன்பள்ளிக் கட்டடங்களுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

கன்சாய் எஸ்லோன் லங்கா நிறுவனம் மற்றும் மக்கள் சக்தி V-Force ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

ஆமர்வீதி நியூபசார் முன்பள்ளி, கிரான்ட்பாஸ் பராக்கிரம முன்பள்ளி மற்றும் மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் முன்பள்ளிக் கட்டடங்களுக்கு இன்று வர்ணம் பூசப்பட்டது.

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட 7 முன்பள்ளிக் கட்டடங்களுக்கு நேற்று வர்ணம் பூசப்பட்டது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்காக இலவசமாக நடத்திச்செல்லப்படும் 7 முன்பள்ளி கட்டங்களுக்கு வர்ணம் பூசுவதற்கான திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வெள்ளவத்தை பீட்டர்ஸன் முள்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, மக்கள் சக்தி V-Force படையணியுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கலைஞர்களும் இணைந்துகொண்டனர்.

கொழும்பு 3 – ஸ்டான்லி ஜேம்ஸ் முன்பள்ளி, கொழும்பு 2 – நைட்டா முன்பள்ளி, வணாத்தமுல்ல என்.எம்.பெரேரா முன்பள்ளி ஆகியவற்றுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வர்ணம் பூசப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்