வெல்லாவெளியில் 17,200 ஏக்கரில் சிறுபோகம்

மட்டக்களப்பு - வெல்லாவெளியில் 17,200 ஏக்கரில் சிறுபோகம்

by Staff Writer 04-03-2020 | 12:11 PM
Colombo (News 1st) 2020 சிறுபோக வேளான்மைச் செய்கையை மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 17,200 ஏக்கரில் மேற்கொள்வதற்கு ஆரம்பப் பயிர்ச்செய்கைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் நீர்ப்பாசனங்களை வினைத்திறனுடன் செயற்படுத்துவது பற்றியும் அரசாங்க உதவித் திட்டத்தில் உர வகைகளைப் பெற்றுக்கொடுப்பது பற்றியும் தரமான விதைநெல்லைப் பயன்படுத்துவது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. செய்கை பண்ணப்படாத நெல் வயல்களில் மறு பயிர்களை உற்பத்தி செய்வது பற்றியும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.