ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கிய மோதல்கள்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கிய மோதல்கள்

by Chandrasekaram Chandravadani 04-03-2020 | 11:00 AM
Colombo (News 1st) அரசாங்கத்துடனான ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தலிபான் முடித்துக்கொண்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன. இதனால் அடுத்த வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 16 மாகாணங்களில் மோதல்கள் வலுப்பெற்றுள்ளதுடன் இதுவரை கிளர்ச்சியாளர்கள் 8 பேர் மற்றும் பொதுமக்கள் 6 பேருடன் பாதுகாப்பு தரப்பினர் எண்மர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, தலிபான் தலைவருடன் சிறப்பான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் தலிபானுக்கும் இடையில் சமீபத்தில் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்தத் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.