புதிய கூட்டமைப்பின் சின்னம் குறித்த இறுதித் தீர்மானம் இன்று

புதிய கூட்டமைப்பின் சின்னம் குறித்த இறுதித் தீர்மானம் இன்று

புதிய கூட்டமைப்பின் சின்னம் குறித்த இறுதித் தீர்மானம் இன்று

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2020 | 10:20 am

Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் குறித்து இன்று (04) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தையொன்று சஜித் பிரேமதாச தலைமையில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமகி ஜனபலவேகய என்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பிலேயே போட்டியிடுவதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (04) பிற்பகல் மீண்டும் கூடவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரிவசம் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்